என் பிரபஞ்சத்தின் அத்தனை இடுக்குகளிலும் நிறைந்திருக்கும் இருட்டில்
உன் சின்னஞ்சிறு சிரிப்புகளால் சிதறி இறைக்கிறாய் சந்தோஷ நட்சத்திரங்களை.
'இதுதான் உன் கடைசி சுதந்திர நாள். இப்போ அந்த மணமேடைக்கு போயிட்டா திரும்பி தனியா வர முடியாது. எப்போவும். உனக்கு இது வேணுமா ? நல்லா யோசி' மனசாட்சி கண்டபடி கேள்வி கேட்டது. 'நீதான சரின்னு சொன்ன. இப்போ என்ன ?' என்று இன்னோரு பக்கம்.
"ஏய் வாண்டுங்களா, வெளிய போங்க. இது பொண்ணு ரூம். அபி ரெடி ஆ ?" என்றாள் ப்ரியா உள்ளே நுழைந்துகொண்டே. என் ஆருயிர் தோழி, என் சகோதரி, என் எல்லாமே.
"நான் இப்போ கல்யாணம் பண்ணிக்கணுமா ? என்ன அவசரம் 22 வயசுல ?"
"மூடிட்டு வாடி பொண்ண கூப்பிடுறாங்க." என்று வேகமாக என் கையை பிடித்து இழுத்தாள்.
மணமேடை நோக்கி நடந்தோம். மத்தளச்சத்தம் தாண்டி என் இதயத்துடிப்பு கேட்டது.
"ப்ரியா, பேசாம இவன நீ கல்யாணம் பண்ணிக்கோயேன்."
"இப்போ பேசாம வரியா இல்ல வாய்க்குள்ள கத்தியவிட்டு ஆட்டவா" என்று முணுமுணுத்தாள் ப்ரியா.
பவ்யமாய் உட்கார்ந்தேன் மணமேடையில். எங்கிருந்து வந்தது அந்த பவ்யம் எனக்கே தெரியாது.
"ஒரு எடத்துல அஞ்சு நிமிஷம் சும்மா உட்காரமாட்டா இப்போ பாருங்க எவ்ளோ பவ்யமா உட்கார்றத" என்று அம்மா அப்பாவிடம் சொல்ல, ஆனந்தமாய் என்னை பார்த்து சிரித்தனர் இருவரும். எல்லோர் முகத்திலும் சந்தோஷம். கூட்டத்தின் மொத்த பார்வையும் என் மீது. பல்ஸ் எகிறியது. மறுபடியும் உள்ளிருந்து அதே குரல், 'அவ்ளோதான். இனிமே எதும் செய்ய முடியாது அபி, உன் சுதந்திரம் காலி'
"என்னாச்சு" என்று கை பிடித்தான் அருண்.
"அருண், கல்யாணத்த நாளைக்கு வெச்சிக்கலாமா ?"
"ஏன் பஸ் பாஸ் renew பண்ணபோறியா" என்றான் சிரித்துக்கொண்டே. ப்ரியாவும் சிரித்தாள், ஐயரும் சிரித்தார். எல்லோரும் சிரித்தனர். காது சூடானது. நெற்றியில் ஒரு சொட்டு வேர்வை எட்டிப்பார்த்தது. மாங்கல்ய தட்டு ஐயரிடம் நீட்டப்பட்டது. மாங்கல்யத்தை கையில் எடுத்தவர் அருணிடம் கொடுத்து கெட்டிமேள சிக்னல் கொடுத்தார். கையை கூப்பியபடி கண்ணை மூடினேன்.
"பாட்டி, பாட்டி..." என்று யாரோ என்னை எழுப்பினார்கள். "தாலி கட்டப்போறாங்க..."
மாங்கல்ய தட்டு ஐயரிடம் நீட்டப்பட்டது. மாங்கல்யத்தை கையில் எடுத்தவர் மாப்பிள்ளையிடம் கொடுத்து கெட்டிமேள சிக்னல் கொடுத்தார். கையை கூப்பியபடி கண்ணை மூடினாள் என் பேத்தி.
தீயெனத் தீயாய் நம்மிடையே பரவும் negativity, மிகப்பெரிய அச்சத்தையும், கவலையையும் உண்டாக்குகிறது. கண் விழித்ததும் 'எதுவுமே சரியில்லை' என்ற எண்ணத்தை விதைத்துக்கொண்டே இருக்கிறது நம் மீடியாக்கள். அவர்களை குற்றம் சொல்லி ஒன்றுமில்லை. நாமும் அதைத்தான் விரும்பி பார்க்கிறோம், அதிகம் share செய்கிறோம், அதிகம் விவாதிக்கிறோம். Youtube ட்ரெண்டிங் லிஸ்ட் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு (காண சகிக்கவில்லை). நம் சிந்தனைகள் வன்மத்தையும், வக்கிரத்தையும், வன்முறையையும் நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை கண்கூடாகவே பார்க்கமுடிகிறது.
இதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று யோசித்தீர்களேயானால், முடியும். மனதிற்குள் 'All is well' என்று தினம் சொல்லிக்கொள்ளுங்கள். நீங்கள் யோக்கியமா என்று உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள். தவறு செய்தவர்களுக்கு constitutionஓ, கருட புராணமோ, ஆறுச்சாமியோ, அந்நியனோ ஏதோ ஒரு வகையில் தண்டனை வந்து சேரும். நம்புங்கள் இந்த பூமி அழகானது. Hope is a good thing and no good thing ever dies !
ஒரு பாடலோடு வெற்றி, உங்களை தன்னோட சேர்ந்து பாடவைக்கறது தான்.
நமக்கென்ன சுருதி தெரியுமா, தாளம் தெரியுமா ?
"ஓட நீரோடை இந்த உலகம் அதுபோல,
ஓடும் அது ஓடும் இந்த காலம் அதுபோல,
நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே" னு கேட்டா நாம தானா சேர்ந்து பாடறதில்ல ??
மனசுக்கு பிரிவினை தெரியாது. இது இளையராஜா, இது ரஹ்மான் னு. அதுக்கு புடிச்சா கூட சேர்ந்து பாடும். அவ்வளவே !!